முதலில் ஒரு நினைவுத்தூணாக மட்டுமே அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் பல இடர்பாடுகளை கடந்து இன்று, தமிழர்கள் அதிகளவில் அழிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டுப் போரின் நினைவுச் சின்னமாக இன்று உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த ஒன்றுமறியாத அப்பாவி மக்களின் நினைவாக எழுந்துள்ள இத்திருப்பணி அன்பும் அர்ப்பணிப்பும் கொண்ட தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டப்பணி, தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் மேற்பார்வையில் நடந்தது.
இந்த மாபெரும் நினைவுச்சின்னத்தின் ஆக்கமும் நோக்கமும் நம்மவர்களுக்கு தமிழன் வஞ்சிக்கப்பட்டதற்கான ஒரு வடுவென விளங்க வேண்டும். உன்னதமிக்க ஒரு கோரிக்கைக்கு அரசு மற்றும் உலக நாடுகள் தந்த வஞ்சனை மிகுந்த வெகுமதி ஆகும்.
நம்மைப் பொறுத்தவரை இது ஒரு நினைவுச்சின்னம் மட்டுமல்ல ஒரு வரலாற்றுப் பேரிலப்பின் பிரதிபலிப்பாகும். மேலும், தமிழ் சமூகத்தின் தொடரும் அவலங்களுக்கு இந்த நிகழ்வு ஒரு பெரும் உலகளாவிய அதிர்ச்சி ஆகும். நாம் இழந்த பெருவாரியான மக்களின் உயிர்த்தியாகத்தினை ஒரு அர்ப்பணிப்பாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதன் பொருட்டு உயிர் நீத்தோர் அனைவரும் தியாகிகளே.
அவர்களின் ஆன்மா சாந்தி அடைய நாம் அன்றையதினம் நமது தமிழக ஆதரவாளர்களுடன் சோழ மாமன்னனின் மண்ணில் உள்ள நினைவு முற்றலில் அஞ்சலி செலுத்த கூட உள்ளோம்.
எனவேதான் நாம் நமது இன மக்கள் பாதுகாப்பு மற்றும் சிரமங்கள் தேவைகளை பரஸ்பரம் புரிதல் அவசியமாகும் மேலும் அரசு சாரா தீர்வு மற்றும் திட்டங்களை வகுத்து செயல் பட வேண்டும்.
Leave A Comment